அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்…!
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள 41 ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் மூன்று நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். இவரது வருகையை ஒட்டி, தமிழாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இவர் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நிலையில் இன்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள 41 ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் இவர் 69 மாணவர்களுக்கு பட்டம் வழங்க உள்ளார். இதில் ஜனாதிபதியுடன் உயர்கல்வி அமைச்சர் அவர்களும் கலந்து கொள்ள உள்ளார்.