இன்று காஞ்சிபுரம் வருகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்ய இன்று தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். அவரது வருகையை சுமார் 2,500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தரிசனத்திற்க்கான நேரமும் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
40 வருடங்களுக்கு ஒரு முறை காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் தரிசனம் நடைபெரும். இதற்க்கு முன்னர் கடந்த 1979 ம் ஆண்டு அத்திவரதர் தரிசனம் நடைபெற்றது. அதன் பின் இந்த ஆண்டு சிறப்பாக நடைபெறுகிறது. இந்த தரிசனத்திற்கு நாள் தோறும் லட்சக்கணக்கானோர் வரும் நிலையில் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.
இன்று மதியம் சென்னை லயோலா கல்லூரிக்கு தனி விமானம் மூலம் வரும் குடியரசுத் தலைவர் குண்டு துளைக்காத பாதுகாப்பான வாகனத்தில் கோவிலின் மேற்கு கோபுரம் வருகிறார். அவருக்கு தரிசிக்க ஒதுக்கப்பட்ட நேரம் மாலை 4 – 5. இந்த நேரத்தில் சிறப்பு தரிசனம் உட்பட எந்த தரிசனமும் நடைபெறாது என்று கூறியுள்ளனர்.