தமிழகத்தை சேர்ந்த மாரியப்பனுக்கு கேல் ரத்னா விருதை வழங்கினார் குடியரசு தலைவர்.!

தமிழகத்தை சேர்ந்த மாரியப்பனுக்கு கேல் ரத்னா விருதை வழங்கினார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்.
விளையாட்டுத் துறையில் சிறந்த விளங்குபவர்களுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா, துரோணாச்சார்யா ஆகிய விருதுகளை மத்திய அரசு வழங்கி வருவது வழக்கம். அந்தவகையில், இந்த விருதுகளைப் பெறுபவர்களின் பட்டியலை மத்திய அரசு அண்மையில் வெளியிட்டது. அதில், தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, மகளிா் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா ஆகியோருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க மத்திய அரசு அறிவித்தது. அதுவும், இன்று 29 ஆம் தேதி காணொளி மூலம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்குகிறார் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், டெல்லியில் காணொளி கட்சி மூலம் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வீரர்களுக்கு விருதுகளை வழங்கினார். அதில், பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலுக்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. மேலும், கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, மகளிா் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா ஆகியோருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025