கடந்த மாதம் 23ஆம் தேதி கோவை, உக்கடம் பகுதியில் நடந்த கற் சிலிண்டர் வெடி விபத்து தமிழகத்தில் ஓர் பதற்றத்தை உருவாக்கியது என்றே கூறலாம். இருந்தும் தமிழக காவல்துறையின் துரித நடவடிக்கைகள் பதற்றத்தை வெகுவாக குறைத்தன.
தற்போது இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ மேற்கொண்டு வருகிறது. இதில் தமிழக காவல்துறை உதவியுடன் இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வெடி விபத்து நடந்த இடம் அருகே உள்ள இந்து கோவிலில் மத நல்லிணக்க கூட்டம் நடைபெற்றது. அனைத்து ஜமாத் கூட்டமைப்பின் தலைவரான இணையதுல்லா உள்ளிட்ட 10 இஸ்லாமிய தலைவர்கள் அங்குள்ள இந்து கோவில் செயல் அதிகாரி, பூசாரி ஆகியோரை சந்தித்து பேசினர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜமாத் கூட்டமைப்பின் தலைவரான இணையதுல்லா, ‘ கோவை கார் வெடிப்பு சம்பவத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இஸ்லாம் வன்முறைக்கு எதிரானது. மதநல்லினத்திற்காக இந்த சந்திப்பு நடைபெற்றது. ‘ என கூறினார்.
மேலும், ‘ கோட்டைமேடு பகுதியில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் அண்ணன் தம்பிகளாக வாழ்ந்து வருகிறோம். எங்களுக்குள் மத அரசியலை உட்படுத்த வேண்டாம், எங்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்த கோயில் நிர்வாகத்திற்கு நன்றி. இந்து-முஸ்லிம் ஒற்றுமையை கோவையில் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் தேர் திருவிழா நடக்கும் போதெல்லம் இஸ்லாமியர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளோம்.’ எனவும் கூறியுள்ளார் ஜமாத் கூட்டமைப்பின் தலைவரான இணையதுல்லா.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…