கிண்டி மருத்துவமனை.. கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா.! தமிழகம் வரும் குடியரசு தலைவர்.!
ஜூன் 15ஆம் தேதி தமிழகம் வருகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.
சென்னை கிண்டியில் பல்வேறு வசதிகளுடன் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடமானது ஜூன் மாதம் 5ஆம் தேதி திரப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்காக குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை தமிழகத்திற்கு அழைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் டெல்லி புறப்பட்டு சென்று நேரில் அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால், சில நிர்வாக காரணங்கள் காரணமாக ஜூன் 5ஆம் தேதி குடியரசுத் தலைவரால் தமிழகம் வர இயலவில்லை. இதனை தொடர்ந்து தற்போது ஜூன் 15ஆம் தேதி தமிழகம் வருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதன் காரணமாக கிண்டி பல்நோக்கு மருத்துவமனையானது ஜூன் 15ஆம் தேதி திறக்கப்படும் என தெரிகிறது. இந்த புதிய மருத்துவமனைக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பெயர் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அவரது நூற்றாண்டு பிறந்தநாள் ஆண்டை முன்னிட்டு இந்த கட்டிடம் அனுமதி திறக்கப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.