இனி மருந்து சீட்டில் ‘Capital’ எழுத்துக்களில் தான் எழுத வேண்டும்.! சுகாதாரத்துறை திடீர் உத்தரவு.!

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் பணியாற்றும் மருத்துவர்கள் மருந்துச்சீட்டில் நோயாளிகளும் புரியும் வகையில் தெளிவாக Capital Letters-இல் (பெரிய எழுத்தில்) தான் இனி எழுத வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. நோயாளிகளுக்கு புரியும் வகையில் மருந்துகளின் பெயர்களை எழுதித் தர வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவுறுத்தியிருந்த நிலையில் இந்த உத்தரவை தமிழக அரசு தற்போது பிறப்பித்திருக்கிறது.

மருத்துவர்கள் நோயாளிகளுக்கு எழுதி கொடுக்கும் மருந்துச்சீட்டில் இருக்கும் எழுத்துக்கள் புரியாத வகையில் இருப்பதாக பல காலமாக கருத்து நிலவி வருகிறது. இந்த நிலையில் நோயாளிகளுக்கு புரியும் வகையில் மருந்துகளின் பெயர்களை எழுதித் தர வேண்டும் என்று மத்திய அரசு அண்மையில் அறிவுறுத்தியிருந்தது.

30% நிதி.. பேரு மட்டும் ‘பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா’.! அமைச்சர் கடும் விமர்சனம்.!

இதையடுத்து இது தொடர்பான உத்தரவை தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகள் பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது. அதன்படி மருத்துவர்கள் நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கும் மருந்துச்சீட்டில் அவர்களுக்கு புரியும் வகையில் Capital எழுத்தில் எழுத வேண்டும் என மருத்துவம் மற்றும் ஊரக பணி இயக்கம் உத்தரவிட்டுள்ளது, இந்த விஷயத்தை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்