பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள், பள்ளிகள் திறப்பிற்கான முன்னேற்பாடுகள் குறித்து, அதிகாரிகளுடன் இன்று மாலை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், தமிழக முழுவதும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பண்டிகைகள் தொடர்ந்து வரும் நிலையில், இதுதொடர்பாக மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், பள்ளிகள் திறப்பு மற்றும் வழிபாடு தலங்கள் திறப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதனையடுத்து, நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள், பள்ளிகள் திறப்பிற்கான முன்னேற்பாடுகள் குறித்து, அதிகாரிகளுடன் இன்று மாலை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…
மும்பை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே…
டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக…
பிஹார் : மாநிலத்தின் பெகுசராய் நகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் "பலாயன் ரோகோ, நவுக்ரி தோ" (இடம்பெயர்வை நிறுத்து, வேலைவாய்ப்பு கொடு)…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ' யார் அந்த தியாகி?'…
சென்னை : நடப்பு ஐபிஎல் சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி…