DMDK Vijayakanth - Premalatha Vijayakanth [File image]
தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சி (தேமுதிக ) தலைவர் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாகவே உடல்நிலை கருத்தில் கொண்டு கட்சி நிகழ்வில் கூட பெரும்பாலும் பங்கேற்காமல் வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறார். உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதை அடுத்து வெளிநாடுகளுக்கு சென்றும் இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்னை மியாட் (MIOT) மருத்துவமனையில் விஜயகாந்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல்நிலை குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்த நிலையில் விஜயகாந்த் நலமுடன் இருப்பதாக அவரது மனைவி பிரேமலதா தெரிவித்தார். அடுத்து விஜயகாந்த் உடல்நிலை சற்று தேறியபின்னர் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்க்கு அனுப்பப்பட்டார்.
மிக்ஜாம் புயல் பாதிப்பு.! 4 மாவட்ட மின் கட்டணம் எவ்வளவு.? வெளியான முக்கிய தகவல்…
வெகு நாட்களாக கட்சி நிகழ்வுகளில் பங்கேற்காமல் இருந்து வந்த நிலையில் இன்று சென்னை திருவேற்காட்டில் நடைபெற்று வரும் தேமுதிக கட்சியின் 18வது மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜயகாந்த் கலந்துகொண்டார். வீல் சேரில் , தனது மனைவியும், தேமுதிக பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த், துணை பொதுச்செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் வந்தனர். கேப்டன் விஜயகாந்தை நீண்ட நாட்கள் கழித்து கண்டவுடன் தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர்.
இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் கட்சி தொண்டர்கள் என கட்சியினர் பலர் பங்கேற்றனர். இந்த பொதுக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கிய தீர்மானமாக தேமுதிக கட்சி பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார். அடுத்து நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கும் முழு அதிகாரம் தலைவர் விஜயகாந்திற்கு மட்டுமே இருக்கிறது என்றும் , தொண்டர்கள் உற்சாகமுடன் தேர்தல் களத்தில் பங்கேற்க வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. போட்டியில் விளையாட வீரர்கள் தயாராகி…
வாஷிங்டன் : நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து Crew-10 மிஷனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர்.கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க…
சென்னை : நேற்று (மார்ச் 14) 2025-26 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்தார்.…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…