நடிகரும், தேசிய முற்போக்கு திராவிட கட்சியின் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். மறைந்த கேப்டன் விஜயகாந்தின் உடல் அரசு மரியாதையுடன் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில், மறைந்த விஜயகாந்தின் திருவுருவப் படம் திறக்கப்பட்டது. இதனை விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் திறந்து வைத்தார். இதன்பின் தொண்டர்கள் மத்தியில் கண்ணீர் மல்க பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது, நம் கேப்டன் இருக்கும் இடம் தான் நமக்கு கோவில். கேப்டன் விஜயகாந்த் நினைவிடம் அனைவரும் வணங்கத்தக்க கோவிலாக மாற்றப்படும்.
தலைவர் விஜயகாந்த் நம்முடன் தான் இருக்கிறார். இதுவரை உலகத்தில் இவரைப்போல் ஒரு புண்ணிய ஆத்மா இருந்ததாக வரலாறு கிடையாது, இனியும் அதுபோன்ற வரலாறு வரப்போவதும் கிடையாது. தொண்டர்களை வாழவைத்து அழகு பார்க்கும் அன்னையாகத்தான் இனி என் வாழ்வு இருக்கும். கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் தினமும் அன்னதானம் என்பது இந்த பிரபஞ்சம் இருக்கும்வரை தொடரும். அவரது பெயரில் பலர் டிரஸ்ட் ஆரம்பிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
அமர்பிரசாத் ரெட்டி மீது வழக்கு பதிவு..!
மேலும், உங்களது விருப்பப்படி, அந்த ட்ரஸ்டை நான் அவர் மறைந்த அன்றே ஆரம்பித்துவிட்டேன். வள்ளல் விஜயகாந்த் மெமோரியல் அன்னதானம் ட்ரஸ்ட் என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்க வேலைகள் அன்றே ஆரம்பித்துவிட்டது. இதனால், வள்ளல் விஜயகாந்த் அன்னதானம் ட்ரஸ்ட் என்ற பெயரில் தலைமுறைகளை தாண்டியும் இப்பணி தொடரும் என தெரிவித்தார். மெமோரியல் என்பதை வைத்து, அதன்மூலம் மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்க முடியும். எனவே, கேப்டன் நமக்காக ஒரு தங்கப்பாதையை அமைத்து கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.
எதற்கும் நாம் பயப்பட வேண்டாம், கேப்டன் விஜயகாந்த் என்னலாம் செய்தாரோ, நினைத்தாரோ அதனை நாம் ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று மக்களை சந்தித்து செய்ய போகிறோம். விஜயகாந்த் அவர்கள் சொன்னதை நிச்சயம் நாம் செய்ய போகிறோம் என தொண்டர்கள் மத்தியில் பிரதமலதா விஜயகாந்த் உரையாற்றினார். இதனிடையே, கடந்த 28ம் தேதி அதிகாலை கேப்டன் விஜயகாந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டது குறித்தும் அவரது இறுதி நேரங்கள் குறித்தும் கண்ணீர் சிந்தியபடி எடுத்துரைத்தார்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…