மக்களவை தேர்தலில் பாமக-பாஜக-புதிய தமிழகம்-புதிய நீதிக்கட்சி ஆகியவை அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டது.
ஆனால் அதிமுக கூட்டணியில் தேமுதிகவை இணைக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது .
அதேபோல் தேமுதிக மூத்த நிர்வாகிகள் சிலர் திமுக பொருளாளர் துரைமுருகனை சந்தித்தனர். முன்னாள் எம்எல்ஏ அனகை முருகேசன், இளங்கோவன் உள்ளிட்டோர் துரைமுருகன் வீட்டுக்கு சென்று சந்தித்தனர்.
இதன் பின்னர் திமுக பொருளாளர் துரைமுருகன் கூறுகையில்,எங்களிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த தே.மு.தி.க நிர்வாகிகள் வந்தனர்.எங்களிடம் கொடுக்க தொகுதி இல்லை என்று தெரிவித்தேன்.அதிமுக உடனான தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஏதோ தவறு உள்ளது.
தேமுதிக கூட்டணி குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார். தேமுதிக தொடர்ந்து முயற்சி செய்தால் பரிசீலனை செய்யப்படும் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்று கூட்டணி தொடர்பாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விளக்கம் அளித்தார்.அதில் மக்களவை தேர்தலில் தேமுதிக நிலைப்பாடு குறித்து ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை,குழப்பமுமில்லை.அரசியல் ரீதியாக தேமுதிகவை திமுக பழிவாங்குகிறது.திமுக, அதிமுக என இரு தரப்பினரிடமும் தேமுதிக பேசியதாக எழுப்பப்படும் கேள்வியே தவறானது.கலைஞர் உடல்நலம் இல்லாத போது சந்திக்க விஜயகாந்த் அனுமதி கேட்டார். ஆனால் ஸ்டாலின் அனுமதி கொடுக்கவில்லை. .தேமுதிகவை தொடர்ந்து பழிவாங்கும் நோக்கத்தோடு திமுக செயல்பட்டு வருகிறது.துரைமுருகன் பேசியது வெட்கக்கேடானது. உட்கார்ந்த இடத்திலிருந்து அவர் தூங்குவார் என்று கேள்விப்பட்டிருக்கேன். அதற்காக இப்படியா உளற வேண்டியது. திமுக என்றாலே “தில்லுமுல்லு கட்சி” என்று அன்றே சொன்னார் எம்.ஜி.ஆர்.
எதிரியாக இருந்தாலும் வரவேற்பதுதான் தமிழர் பண்பாடு .துரைமுருகன் நடந்து கொண்டது சரியில்லை.
தேமுதிக கொள்கையில் உறுதியாக உள்ளது, நாடாளுமன்ற தேர்தல் என்பதால் ஏதேனும் ஒரு தேசிய கட்சியுடன் கூட்டணி வைத்து ஆக வேண்டும் .கடந்த தேர்தலில் தனித்து நின்று வெற்றி பெற்ற அதிமுக எம்.பி.க்களால் தமிழகத்திற்கு என்ன பலன் கிடைத்தது.
கூட்டணி குறித்து விஜயகாந்த் மற்றும் நிர்வாகிகள் முடிவு செய்வார்கள்.கட்சி மீது விமர்சனம் வைப்பதால், கூட்டணி வைக்க மாட்டோம் என அர்த்தமில்லை.ஜெயலலிதாவை எதிர்த்து சட்டப்பேரவையில் மக்களுக்காக குரல் கொடுத்தவர் விஜயகாந்த். அதிமுக ஆட்சி தொடர தேமுதிக கூட்டணி வைத்தது தான் காரணம்.தனித்து போட்டியிட தேமுதிகவுக்கு பயமில்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விளக்கம் அளித்தார்.
இந்நிலையில் திமுகவின் சந்திரகுமார் பிரேமலதாவின் கருத்துக்கு பதில் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,பிரேமலதா விஜயகாந்த் பொதுக்கூட்டத்தில் பேசுவதுபோல பேசி, பத்திரிகையாளர்களை கேவலப்படுத்துகிறார் .கருணாநிதியை சந்திக்க ஸ்டாலின் அனுமதி மறுத்ததாக திரும்ப திரும்ப பொய் கூறி வருகிறார் பிரேமலதா .
பூட்டிய அறையில் சிக்கிய எலி போல பிரேமலதா விஜயகாந்த் விரக்தியில் இருக்கிறார்.திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் 45 நிமிடங்கள் அமர்ந்து பேசிவிட்டு, அதை தற்போது மறுக்கிறார்கள் என்று சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை : தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.880 குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2…
சென்னை :இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது .இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவை உருவாக்குவார்கள்…
கொல்கத்தா : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களுக்கு இன்னும் என்னென்ன சர்ப்ரைஸான விஷயங்கள் எல்லாம் இருக்கப்போகிறதோ என்கிற…
சென்னை : வைகோ அப்பலோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வலது தோள்பட்டை காயம் காரணமாக 2 நாள்களுக்கு முன்…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தன் தாய்க்கு முறையாகச் சிகிச்சை…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவருக்கு நடந்த கத்திக்குத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள…