நடிகர் விஜய் உடனான சந்திப்பு.. பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்.!

Vijay and TheGoat team with Vijayakanth family

சென்னை : நடிகர் விஜய் உடனான சந்திப்பு குறித்து பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விளக்கம் அளித்துள்ளார்.

மறைந்த கேப்டன் விஜயகாந்தின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு, ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் விஜயகாந்த் உருவத்தை கையில் ‘டாட்டூ’ போடும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வை கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று காலை பார்வையிட்டார்.

அதன்பின், செய்தியாளர்களை சந்தித்து பேசிய தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, விஜய் உடனான சந்திப்பு குறித்தும், தவக கட்சியின் கொடி குறித்தும் பேசினார். இது குறித்து அவர் கூறியதாவது, ” எங்கள் வீட்டிற்கு விஜய் வந்த போது, விஜய பிரபாகரனை பார்த்து, ‘நீ தான் எனக்கு அரசியலில் சீனியர், வாழ்த்துகள்’ என்று கூறினார்.

மேலும், கோட் திரைப்படத்தில் முறைப்படி விஜயகாந்த் அவர்களை Al தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தி இருக்கிறார்கள். இதற்காக திரைப்படக் குழுவுடன் வந்து நன்றி தெரிவித்தார்கள். விஜய் எங்கள் குடும்பத்தில் ஒருவராக தான் வந்து சந்தித்தார், அரசியல் காரணமாக எங்களை வந்து சந்திக்கவில்லை” என்றார்.

கோட் படத்தில் கேப்டன் விஜயகாந்த் வரும் இடம் ரொம்பவே பிரம்மாண்டமாக வந்திருக்கும்மான்னு சொன்னார். நிச்சயம் இந்த படம் விஜய்க்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையும் ” என்று கூறினார்.

அழைப்பு விடுத்த விஜய்

நடிகர் விஜய் மட்டுமின்றி GOAT படக்குழுவினர் அனைவரும் எங்கள் வீட்டுக்கு வந்து எங்களை சந்தித்தார்கள். கோட் படத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் விஜயகாந்த் தோன்றுவதாக வெங்கட்பிரபு கூறி இருந்தார். மேலும் GOAT திரைப்படத்தை குடும்பத்துடன் பார்க்க வருமாறு விஜய் எங்களை அழைத்தார்.

பிரேமலதா அறிவுரை

தவெக கொடியை வெளியிட்ட விஜய்க்கு, பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். எங்க வீட்டுப்பிள்ளை விஜய். இனி ஒவ்வொரு அடியையும் விஜய் யோசித்து வைக்க வேண்டும் என்று அறிவுறுத்திய அவர், பல சர்ச்சைகள், சவால்களை சந்திக்க வேண்டியது தான் அரசியல் என்றும் கூறினார். மேலும், தங்கள் வீட்டுக்கு விஜய் வருவது புதிதல்ல என்று கூறிய அவர், மகன் விஜய பிரபாகரனுக்கு அவர் நல்ல நண்பர் எனவும் பாராட்டினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்