தேமுதிக பொறுப்பாளர்களுடன் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை.!

தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தேர்தல் பொறுப்பாளர் கூட்டம் நடைபெறுகிறது.
கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவகத்தில் தேமுதிக தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் தொடங்கியுள்ளது. தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தேர்தல் பொறுப்பாளர் கூட்டம் நடைபெறுகிறது. மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனிடையே, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழக சட்டசபை தேர்தலில் 41 தொகுதிகளை கொடுக்கும் கட்சி உடன் கூட்டணி என்பது தேமுதிகவின் நிலைப்பாடு என தெரிவித்தார். தேமுதிக எந்த கூட்டணியில் உள்ளதோ அந்தக் கூட்டணி தான் ஆட்சியமைக்கும். 2011-ல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தோம், அதிமுக ஆட்சி தான் இதுவரை தொடர்கிறது என குறிப்பிட்டுள்ளார்.