பிரேமலதா விஜயகாந்த் விரைவில் பூரண நலம் பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் – ஓ.பன்னீர் செல்வம்
பிரேமலதா விஜயகாந்த் விரைவில் பூரண நலம் பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என ஓ.பன்னீர் செல்வம் ட்வீட் செய்துள்ளார்.
கடந்த 22-ஆம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதனிடையே விஜயகாந்த் மனைவியும், தேமுதிக பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்திற்கு நேற்று கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,கொரோனா தொற்றுகுள்ளாகி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும், தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனர் திரு.விஜயகாந்த் அவர்களின் துணைவியாரும், அக்கட்சியின் பொருளாளருமான திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
கொரோனா தொற்றுகுள்ளாகி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும், தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனர் திரு.விஜயகாந்த் @iVijayakant அவர்களின் துணைவியாரும், அக்கட்சியின் பொருளாளருமான திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். pic.twitter.com/eGrmw8ctDQ
— O Panneerselvam (@OfficeOfOPS) September 28, 2020