விஜயகாந்த்தின் உருவத்தை டாட்டூ குத்திய பிரேமலதா..!

Premalatha

கடந்த டிசம்பர் 28-ம் தேதி தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் காலமானார்.  அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்த் உடலுக்கு கட்சி தொண்டர்களும், ரசிகர்களும், பிரபலங்களும், தலைவர்களும் 2 நாட்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் உடல் தேமுதிக அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

முன்னாள், இன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு… இன்று முதல் விசாரணை..!

இதனால், தற்போது வரை தினமும் விஜயகாந்த் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என பலர்  அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில், இந்நிலையில் விஜயகாந்த் உருவத்தை பிரேமலதா டாட்டூ குத்தியுள்ளார் . தேமுதிக தலைவர் விஜயகாந்த் விஜயகாந்த்தின் உருவத்தை தன்னுடைய வலது கையில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா டாட்டூவாக வரைந்துள்ளார்.

பிரேமலதா குத்தியுள்ள டாட்டூவில்  விஜயகாந்த் சிரித்தப்படி உள்ள புகைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்