பிரேமலதாவுக்கு அனைத்து அதிகாரம்….தீர்மானம் நிறைவேற்றம்..!
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. தமிழகத்தின் முக்கிய கட்சிகளான திமுக பங்கீடு குறித்தும், அதிமுக கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை தொடங்கிய நிலையில், தற்போது இரு கட்சிகளும் தேர்தல் அறிக்கை தொடர்பாக மக்களிடம் தொகுதி வாரியாக கருத்து கேட்டு வருகிறார்கள்.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக எவ்வாறு கையாள போகிறது என கேள்விகள் எழுந்துள்ளது. அதிலும் குறிப்பாக யாருடன் கூட்டணி அமைக்க உள்ளார்கள்..? என்ற கேள்வி எழுந்து வருகிறது. இந்த நிலையில், தேமுதிக பொதுச்செயலாளரான பிரேமலதா அவர்களின் தலைமையில் இன்று காலை 10 மணி அளவில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் என்ஐஏ அலுவலகத்தில் ஆஜர்..!
தமிழகம் முழுவதும் உள்ள தேமுதிக கட்சியின் மாவட்ட செயலாளர்கள் அனைவருக்கும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென தேமுதிக தலைமையிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டது. அதில் ஒன்றாக மக்களவை தேர்தலில் தேமுதிக கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்க அனைத்து அதிகாரங்களையும் பிரேமலதாவிற்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளின் கருத்துக்களைக் கேட்டு கூட்டணி குறித்து முடிவெடுக்க குழு அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் கூட்டணி குறித்து நேரடியாகவும், மறைமுகவோ எந்த கட்சியுடன் பேசவில்லை என தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.