முதற்கட்ட உள்ளாட்சி தேர்தல் – 77.43% வாக்குகள் பதிவு – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Default Image

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெற்ற முதல்கட்ட வாக்குப்பதிவில் 77.43% வாக்குகள் பதிவாகியிருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் திருப்பத்துார் ஆகிய 9 மாவட்டங்களுக்கான முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு சென்ற 6ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது.

இதில், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், கிராம ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 4 பதவியிடங்களுக்கு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக முதற்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த நிலையில் முதல்கட்ட வாக்குப்பதிவில் 77.43% வாக்குகள் பதிவாகியிருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ள 39 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 6ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது. இதில் முதல்கட்ட வாக்குப்பதிவில் மொத்தம் 77.43% வாக்குகள் பதிவாகி உள்ளது என தெரிவித்துள்ளது.

அதன்படி, காஞ்சிபுரம் 84.30%, செங்கல்பட்டு 66.71%, ராணிப்பேட்டை 80.89%, வேலூர் 77.63%, விழுப்புரம் 83.66%, கள்ளக்குறிச்சி 83.25%, திருநெல்வேலி 70.81%, தென்காசி 73.96% மற்றும் திருப்பத்துார் 78.88% என மொத்தம் 77.43% வாக்குகள் பதிவாகி உள்ளது. ஊரக உள்ளாட்சிகளுக்கான முதல் கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்