அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துகுவிப்பு வழக்கின் முதற்கட்ட விசாரணை நிறைவு
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துகுவிப்பு வழக்கின் முதற்கட்ட விசாரணை நிறைவு பெற்றுள்ளது என்று லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வாக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அதில் 2012-13 ஆண்டில் வருமானத்திற்கு அதிகமாக 7 கோடி ரூபாய் அதிகமாக சொத்து வைத்திருப்பதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உய்ரநீதிமன்ற மதுரை கிளை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இதன்படி நேற்று விசாரணை அறிக்கையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துகுவிப்பு வழக்கின் முதற்கட்ட விசாரணை நிறைவு பெற்றுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது. பின்னர் வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.