சென்ட்ரலில் தவித்த கர்ப்பிணி பெண்னை அலைக்கழித்த காவலர்கள்….!!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் வெளியே நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் அழுதபடி அமர்ந்து கொண்டு இருந்தார்.இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கு உதவ முன் வந்த சிலர் விசாரித்தபோது அந்த பெண் சேலத்தில் இருந்து திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் மருத்துவமனையில் பரிசோதனைக்கு வந்ததாகவும் , அவரின் கணவர் டிக்கெட் எடுத்து வருவதாக சொல்லி சென்றதாகவும் ஆனால் திரும்பி வராமல் விட்டுவிட்டு சென்றது தெரியவந்தது.
இந்நிலையில் இது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து பெரியமேடு காவல் நிலையத்தில் இருந்து வந்த உதவி ஆய்வாளர் சத்யா மற்றும் சேர்மக்கனி இது தங்கள் காவல் நிலைய எல்லைக்குள் வராது என்று கூறி திரும்பிச் சென்றனர்.பின்னர் வந்த பூக்கடை போலீசாரும் காவல் நிலைய எல்லை பிரச்சனையை கூறிவிட்டு சென்றனர்.இதையடுத்து பாதுகாப்பு படை போலீசார் தகவலறிந்து அனாதையாக தவித்துக் கொண்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணை மீட்டு சென்னை காவல் ஆணையரிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காவல்ஆணையர் பெரியமேடு மற்றும் பூக்கடை போலீசாரை எச்சரிக்கை செய்து அந்த பெண்ணை மயிலாப்பூர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அவரின் கணவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.