PICME நம்பர் எடுத்தாச்சா? இது இருந்தா தான் பிறப்பு சான்றிதழ் கிடைக்கும்.!

pregnancyjourney

பிக்மி : கர்ப்பிணிப் பெண்கள் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய பிக்மி (PICME) என்றால் என்ன? பிக்மி நம்பர் என்றால் என்ன? இந்த நம்பரை எப்படி பெறுவது? இதனால் என்ன நன்மைகள் போன்றவற்றை இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்வோம் வாங்க…

அனைத்து கர்ப்பிணிப் பெண்களையும் கண்காணிக்க தமிழக அரசால் தொடங்கப்பட்ட ஒரு அமைப்புதான் “PICME” ஆகும். கர்ப்ப கால பரிசோதனைக்காக தனியார் சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்குச் செல்லும் அணைத்து பெண்களும் இந்த PICME இணையதளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.

பிக்மி என்றால் என்ன?

பிக்மி  (PICME) என்பது அனைத்து கர்ப்பிணிப் பெண்களையும் கண்காணிக்க தமிழக அரசால் பயன்படுத்தப்படும் ஒரு அமைப்பாகும். கர்ப்பம் மற்றும் குழந்தைகளின் கூட்டு கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு செய்வதற்காக கடந்த 2008 முதல் செயல்படுத்தப்படுகிறது.

ஆண்டுதோறும் 11 லட்சம் தாய்மார்களின் தகவல்கள் இந்த இணையதளத்தில் பதிவு செய்யப்படுகின்றன. இதன் மூலம், தாய்மார்களுக்கு (RCH) ஆர்சிஎச் எண் எனப்படும் 12 இலக்க கொண்ட பிரத்யேக அடையாள எண் வழங்கப்படுகிறது. இது தாய்மார்கள் தங்கள் குழந்தையின் பிறப்புச் சான்றிதழைப் பெறுவதற்கு கட்டாயமாகும்.

கர்க்கமாகி முதல் மூன்று மாதங்கள் கழித்தும், பிரசவத்திற்குப் பிறகும் கூட, ஒரு கர்ப்பிணிப் பெண் இந்த திட்டத்தில் இணைய முடியும்.

பிக்மி நன்மைகள் :

  • இந்த திட்டத்தில் பதிவு செய்த பிறகு, அவர்களின் தேவைகள் மற்றும் சவால்களைக் கண்காணிக்க உதவுகிறது.
  • இதன் மூலம் திட்டமிடப்பட்ட பிறப்புக்கு முந்தைய பரிசோதனைகள், தடுப்பூசிகள் மற்றும் பிற அத்தியாவசிய சுகாதார சேவைகளுக்கான நினைவூட்டல்களை வழங்குகிறது.
  • இந்தச் சேவை அருகில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளுடன் இணைக்கிறது. இதன் மூலம், தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யப்டுகிறது.

எங்கு பதிவு செய்ய வேண்டும் :

அருகிலுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்குச் சென்று, கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் மகப்பேறு கால சுய விவரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். இல்லையென்றால், ஆன்லைனில் https://picme.tn.gov.in/picme, அல்லது  e-Seva centres,  அல்லது 102 என்கிற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டம்

பிக்மி மூலம், கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்களுக்கு நல்ல ஆரோக்கிய குறிப்புகளை வழங்குவதோடு, டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நன்மைத் திட்டத்தின் கீழ், பலன்களைப் பெறலாம். இத்திட்டத்தின் கீழ், தமிழக அரசு ரூ.12000 வரை நிதியுதவியை தவணை முறையாக வழங்குகிறது. இதன், மூலம் கர்ப்ப கால நிதி சுமையை தவிர்க்கலாம்.

பிக்மி பெற தகுதி:

  1. விண்ணப்பிக்கும் பெண் கர்ப்பமாக இருக்க வேண்டும்.
  2. தமிழ்நாட்டில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்.

தேவைப்படும் ஆவணங்கள் :

  • ஆதார் அட்டை
  • ரேஷன் கார்டு
  • வாக்காளர் அட்டை
  • திருமண சான்றிதழ்
  • பாஸ்போர்ட்
  • ஓட்டுனர் உரிமம்
  • தமிழக மருத்துவ காப்பீட்டு அட்டை
  • வங்கி பாஸ்புக்

PICME எண்ணை பெறுவது எப்படி?

  1. PICME-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, தேவையான தகவல்களை நிரப்புவதன் மூலம் தாயார் ஆன்லைனில் சுயமாகப் பதிவு செய்யலாம்.
  2. அந்த இணையதளத்தின் முகப்புப்பக்கத்தில் உள்ள புதிய பயனர் என்கிற விருப்பத்தை தேர்ந்தெடுத்தால், பதிவு படிவம் ஓபன் ஆகும்.
  3. இப்போது, ​​தேவையான அனைத்து விவரங்களை நிரப்பவும். தேவையான தகவலை வழங்கியவுடன் உங்களுக்காக ஒரு சிறப்பு PICME ஐடி உருவாக்கப்படும்.
  4. இப்போது உங்களுக்கு 12 இலக்க RCH ஐடி வழங்கப்படும்.
  5. இதைப் பயன்படுத்தி உங்கள் கணக்கிற்கான பயனர்பெயர் மற்றும் பாஸ்வேர்ட்  உருவாக்கவும்.
  6. உங்கள் மருத்துவப் பயணத்தைத் தொடர இந்த ஐடியைப் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi