கர்ப்பிணி பெண்ணுக்கு விரைவில் அரசு பணிக்கான ஆணை வழங்கப்படும்….அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தகவல்..!!
H.I.V-வைரஸ் இரத்தத்தை ஏற்றி பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் மற்றும் கணவன் என இருவருக்கும் அரசு பணி நியமன ஆணை வழங்கப்படும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவமனையில் எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணிக்கு மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிக்சை பெற்று வரும் கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனையில் நேரில் சென்று ஆறுதல் கூறிய பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சுமார் 2 லட்ச ரூபாய் நிதி உதவியை பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு வழங்கினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கேட்டுக்கொண்டபடி இலவச வீட்டுமனையும் , இலவச வீடும் உறுதியாக கட்டித் தரப்படும். சிகிச்சை முடிந்து வீட்டுக்கு சென்றதும் கணவன் மனைவி என இருவருக்கும் அரசு வேலைக்கான பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.