Kollam Express: விருத்தாச்சலம் அருகே கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி பெண் பரிதாப பலியாகியுள்ளார்.
சென்னையில் இருந்து கொல்லம் விரைவில் ரயிலில் சென்ற கர்ப்பிணி பெண் கஸ்தூரி என்பவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாந்தி வந்ததால், காற்றோட்டமாக ரயிலின் கதவு ஓரத்தில் நின்று வாந்தி எடுக்க முற்பட்டபோது தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.
நாளை மறுநாள் அவருக்கு சங்கரன்கோவிலில் வளைகாப்பு நடைபெற இருந்த நிலையில், இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கர்ப்பிணி பெண்ணின் குடும்பத்திற்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்ப்பிணி விழுந்தவுடன் அபாய சங்கிலியை பிடித்து இழுத்த பிறகும் ரயில் நிற்கவில்லை என குற்றம் சாட்டிய உறவினர்கள், சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் வரை தண்டவாளத்தில் நடந்து சென்று உடலைத் தேடி மீட்டதாகவும், உடலை தேடி எடுப்பதற்கு 3 மணி நேரமானது என கண்ணீர்மல்க கூறுகின்றனர்.
இதனால், விரைவு ரயில்களில் பாதுகாப்பு குறைப்பாடா என்ற கேள்வி எழுந்துள்ளது. பொதுவாக, ரயிலில் மருத்துவ அவசரம், விபத்து ஏற்படும் பொழுது, அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தலாம். ஆனால், கொல்லம் விரைவு ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணியை மீட்க அபாயச் சங்கிலியை பலர் இழுத்த போதிலும் ரயில் நிற்கவில்லை.
இந்நிலையில், ரயில்களின் பாதுகாப்பு குறித்து பலரும் சந்தேகம் எழுப்பிய நிலையில், விபத்து குறித்து உயர்மட்டக்குழு உரிய விசாரணை நடத்த திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…