மருத்துவமனையில் காணமல் போன கர்ப்பிணி பெண் மீட்பு..,

Default Image

திருவனந்தபுரம்: அன்ஷாத் இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மடத்தரை பகுதியை சேர்ந்தவர். இவரது மனைவி ஷம்னா. நிறைமாத கர்ப்பிணியான இவரை பிரசவத்துக்காக 2 நாட்களுக்கு முன் காலை திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள எஸ்ஏடி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் வார்டுக்கு சென்ற அவர் திடீரென மாயமானார். இது தொடர்பாக மருத்துவ கல்லூரி போலீசாரும் தேடி வந்தனர்.பின்னர் அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்து ரகளையில் ஈடுபட்டனர்.திடிரென அவரது கணவர் அன்ஷாத்துக்கு நேற்றுமுன் தினம் மாலை ஷம்னாவின் போனில் இருந்து அழைப்பு வந்தது. உடனடியாக இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.அதன் பின் அவரது தங்கைக்கு சிறிது நேரத்தில்  அழைப்பு வந்தது. அதில் பேசிய ஷம்னா தான் நலமாக இருப்பதாகவும், தன்னை தேட வேண்டாம் என்றும் கூறியுள்ளார். இதுதொடர்பாக மருத்துவ கல்லூரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் செல்போன் டவரை வைத்து விசாரித்தனர். அப்போது அந்த அழைப்பு வேலூரில் இருந்து வந்தது தெரியவந்தது இந்நிலையில் நேற்று கருநாகப்பள்ளியில் ஒரு பெண் சுற்றி திரிந்ததை ஆட்டோ டிரைவர்கள் கவனித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அவரை பிடித்து விசாரித்தபோது மருத்துவமனையில் இருந்து மாயமான ஷம்னாதான் அது என்று தெரிய வந்தது. இதையடுத்து மருத்துவ பரிசோதனைக்காக அவரை கருநாகப்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்