கர்ப்பிணி திருப்தி பெறாவிட்டால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் இருந்து கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்ஐவி பாதித்த ரத்தத்தை ஊழியர்கள் செலுத்தினார்கள்.
இதனால் விருதுநகரில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணியிடம் சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன் விசாரணை நடத்தினார்.அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி தொற்றுடைய ரத்தம் செலுத்தப்பட்டது துரதிருஷ்டவசமானது.எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 3 பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
எச்ஐவி தொற்று உள்ளவர் தெரிவித்த தகவலின் அடிப்படையிலேயே கர்ப்பிணி உட்பட 2 பேருக்கு சோதனை செய்யப்பட்டது.
கர்ப்பிணிக்கு மதுரை அரசு மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .அவர்கள் திருப்தி பெறாவிட்டால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும்.பாதிக்கப்பட்ட பெண்ணை கண்காணிக்க குழு அமைக்கப்படும்.
பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்படும் என முதல்வர் உறுதியளித்துள்ளார் என்றும் சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில சிகிச்சை பெற்று…
டெல்லி: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது…
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…