அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே புதுக்குடி கிராமத்தை சேர்ந்த தம்பதி வீரமணி – ரமணா. இவர்களுக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ள நிலையில், 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், 3-வது குழந்தை வேண்டாமென முடிவெடுத்து, அந்த குழந்தையை கலைக்க முடிவெடுத்துள்ளார்.
இதனையடுத்து அவர் கருவை கலைக்க இ மருந்து கடையில் மாத்திரை வாங்கி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு அதிகப்படியாக ரத்தப்போக்கு ஏற்பட்டு அரியலூர் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார.
மாத்திரை சாப்பிட்டபின் அவரது கருவில் வளர்ந்த சிசு உயிரிழந்ததை எடுத்து தீவிர சிகிச்சைக்குப்பின் அவரது கருவிலிருந்து குழந்தை அகற்றப்பட்டது. இதனை தொடர்ந்தும் அவருக்கு ரத்தப்போக்கு அதிகமாக இருந்த காரணத்தினால் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், இந்த விவகாரத்தில் மருத்துவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழு மாத கருவை கலைக்க மாத்திரை கொடுத்த மருத்துவர் தேன்மொழி, சக்தி தேவி, வெற்றி செல்வி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…