கல்யாணம் ஆகாமல் கர்ப்பமான பிக்பாஸ் ஜூலி
பிக்பாஸ் ஜூலி ரசிகர்கள் மத்தியில் தனி இடம் பிடித்தவர். முதலில் இவர் ஜல்லிக்கட்டின் மூலம் தான் பிரபலமானார். இவருக்கு வீர தமிழச்சி என்ற பெயரும் வந்தது. பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் இவரது பெயர் மிகவும் கெட்டுவிட்டது.
பின்னர் இவருக்கு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் குழந்தைகள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். அந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் கூட அவரை காலாய்த்து வந்தனர். இப்பொழுது சில பட வாய்ப்புகள் தேடி வந்த நிலையில், விமல் நடித்த படத்தில் கெஸ்ட்ரோலாக வந்துள்ளார்.
தற்பொழுது ஹீரோயின் வாய்ப்பு கிடைத்ததும் தனது முதல் படத்திலேயே கர்ப்பமாக இருப்பது போல் நடித்துள்ளார். புது முக நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் ஜூலி கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது இது திரைப்படத்தின் புகைப்படம்தான் என ரசிகர்கள் லேட்டாக தான் புரிந்துகொண்டார்கள், பல நடிகைகள் நடிக்க தயங்கும் இந்த கதாபாத்திரத்தை தைரியமாக நடிக்க ஒப்புக்கொண்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் இந்த படத்திற்கு பிறகு அவருக்கு நடிகை வாய்ப்புகள் நிறைய தேடி வரும் என்று சினிமா வட்டாரங்கள் பேசுகின்றன.