மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை… செம்டம்பர், அக்டோபரில் சாலை தோண்ட அனுமதியில்லை … அமைச்சர் எ.வ.வேலு.!
மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு.
தமிழகத்தில் அக்டோபர் மாதங்களில் பருவமழை தொடங்கும் என்பதால், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அக்டோபர் மாதத்திற்கு முன்னதாக மேற்கொள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். இதன்படி நடைபெற்று வரும் சாலைப்பணிகளை மழைக்காலம் தொடங்கும் முன் விரைந்து முடிக்கவேண்டும்.
#Monsoon #TNhighways pic.twitter.com/ZGRRa8r6R6
— E.V.Velu (எ.வ.வேலு) (@evvelu) June 27, 2023
இது குறித்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் நடத்திய ஆய்வுக்குப்பிறகு அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, ஆகஸ்ட் மாதத்தில் பாலம், வடிகால் அமைப்புகளில் அடைப்புகள் இருந்தால் அதனை சரிசெய்யவேண்டும் எனவும், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாத காலங்களில் சாலைகளை தோண்ட அனுமத்திக்ககூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.
சாலைகளில் பள்ளம் தோண்டப்பட்ட இடங்களில் மறுசீரமைப்பு பணிகளை மழை தொடங்கும் முன் அதாவது அக்டோபருக்கு முன் முடிக்கவேண்டும் எனவும், மழைநீர் தேங்கும் இடங்களில் நீரை வெளியேற்றுவதற்கு ஜெனரேட்டர் மற்றும் மின் நீரேற்று பாம்புகள் போன்றவற்றை தயார் நிலையில் வைத்திருக்கவேண்டும் எனவும் அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டுள்ளார்.