முன்னெச்சரிக்கை போதாது – பொதுமக்கள் வலியுறுத்தல்
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியா வரை பரவியுள்ளது. இந்தியாவில் இதுவரை 93 பேருக்கு வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஒவ்வொரு மாநிலமாக கொரோனா வைரஸ் பரவுவதையடுத்து அதை பேரிடராக அறிவித்துள்ளது மத்திய அரசு. கொரோனா அச்சம் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யவில்லை. ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக அரசு எடுத்து வருகிறது.
இந்த நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை போதவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கொரோனா தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் ரயில் நிலையங்களில் போதிய முன்னெச்சரிக்கை இல்லை என்று மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பொதுமக்களுக்கு அரசு இலவச முகக்கவசம் வழங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.