கொரோனாவில் இருந்து மீண்டு வர இறைவனை பிரார்த்திக்கிறேன் என அமைச்சர் எல் முருகன் ட்வீட்.
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், லேசான அறிகுறிகளுடன் ஓபிஎஸ் தனி வார்டில் சிகிச்சை பெறுகிறார். தற்போது ஓபிஎஸ்-யின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் குழு அவரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஓபிஎஸ்-க்கு கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் விரைந்து குணமடைய வேண்டும் என அரசியல் தலைவர்கள் பதிவிட்டு வருகிறார்கள். அந்தவகையில், மத்திய இணையமைச்சர் எல் முருகன், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் முதல்வருமான பன்னீர்செல்வம் அவர்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்தேன். அவர் பூரண நலம் பெற்று பொதுப்பணியை முழு உத்வேகத்துடன் விரைவில் தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் இன்று தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று…
சென்னை : தமிழகத்தில், தென் மாவட்டங்களில் கனமழையின் காரணத்தால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் விடுமுறை அறிவித்துள்ளனர். மேலும், திருநெல்வேலி,…
தூத்துக்குடி : தமிழகத்தில், கடந்த சில நாட்களாகவே டெல்டா, தென்மாவட்டங்களில் இருக்கும் இடங்களில் கனமழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. அதில்,…
திருநெல்வேலி : தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடமும் மற்றும் தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கடந்த சில…
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணியைச் சிறப்பாக வழிநடத்தி வந்த ரிஷப் பண்டை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல்…
கோவை : கல்லாபட்டி, , சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா,, வள்ளியம்பாளையம், , கே.ஆர்.பாளையம், வில்லங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு…