பிரேமலதாவின் கருத்து அனைவராலும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது-முதலமைச்சர் பழனிசாமி
- கூட்டணி தொடர்பாக தேமுதிகவுடன் பேசிக்கொண்டிருக்கிறோம் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
- அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைத்து, அதிக இடங்களில் வெற்றி பெறுவோம் என்றும் கூறியுள்ளார்.
முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், கோடை காலத்தில் அனைத்து பகுதிகளுக்கும் தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைத்து, அதிக இடங்களில் வெற்றி பெறுவோம்.
கூட்டணி தொடர்பாக தேமுதிகவுடன் பேசிக்கொண்டிருக்கிறோம் .நாட்டின் குடிமகன் என்ற அடிப்படையில் கே.சி.பழனிசாமி என்னை சந்தித்தார் .ஊழல் பற்றி ஆதாரத்துடன் திமுக பேச வேண்டும். ஆதாரம் இருக்கிறதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜகவுடன் கூட்டணியில் இருந்து பதவி சுகத்தை அனுபவித்த திமுக தற்போது எதிர்த்துப் பேசுகிறார்கள் .இலங்கைத் தமிழர்கள் படுகொலைக்கு காரணமான காங்கிரசுடன் திமுக கூட்டணி அமைத்தது தலைகுணிவு.பிரேமலதாவின் கருத்து அனைவராலும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.அரசின் திட்டங்களை நிறைவேற்றவே பிரதமர் தமிழகம் வருகிறார். தேர்தல் பரப்புரைக்காக இல்லை என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.