தில்லு முல்லு கட்சி.? திமுக அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு நடத்துங்கள்… பிரேமலதா விஜயகாந்த் பேச்சு.!
ஸ்டாலின் மக்கள் முதல்வராக இருந்தால், தங்கள் அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு நடத்தி உத்தமர்கள் என நிரூபியுங்கள் என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவியும், தேமுதிக முக்கிய நிர்வாகியுமான பிரேமலதா விஜயகாந்த் இன்று விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே தேமுதிக சார்பில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டார்.
அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ‘ தன்னுடைய வாழ்க்கை முறையை மாற்றி மக்களுக்காக பணியாற்றியவர் தலைவர் விஜயகாந்த். மேலும், திமுக ஒரு தில்லுமுல்லு கட்சி, கூட்டணி வைக்காமல், காசு கொடுக்காமல் தேர்தலில் ஜெயிக்க முடியுமா.?
தேமுதிக தனித்து போட்டியிட தயார். அதே போல மற்ற கட்சிகளும் கூட்டணி வைக்காமல் போட்டியிட முடியுமா.?! ஸ்டாலின் மக்கள் முதல்வராக இருந்தால், தங்கள் அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு நடத்தி உத்தமர்கள் என நிரூபியுங்கள் என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.