புகழேந்தி 24-ம் புலிகேசியாய் உருவாகி இருக்கிறார்- தினகரன்

Default Image

புகழேந்தி 24-ம் புலிகேசியாய் உருவாகி இருக்கிறார் என்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
இன்று சேலத்தில் முதலமைச்சர் பழனிசாமியை புகழேந்தி சந்தித்தார்.இந்த நிலையில் இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் தினகரன் கூறுகையில்,  கத்தரிக்காய் முத்தினால் சந்தைக்கு வந்துதானே ஆக வேண்டும். புகழேந்தி 24-ம் புலிகேசியாய் உருவாகி இருக்கிறார். அவர் அ.தி.மு.க.வில் இருக்கிறாரா? அ.ம.மு.க.வில் இருக்கிறாரா என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் சிறையிலிருந்து சசிகலா விரைவில் வெளியே வருவார், அதற்கான சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று  தினகரன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்