Unlock 4.0: தனிமைப்படுதலில் சில தளர்வுகளை அளித்த சென்னை ஆணையர் பிரகாஷ்!
தனிமைப்படுத்துதலில் சில தளர்வுகளை அளித்துள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவிவரும் காரணத்தினால், கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கை செப். 30- ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில், வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் அறிகுறி இருந்தால் மட்டுமே பரிசோதனை செய்து தனிமைப்படுத்தித்தப்படுவார்கள் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.
மேலும் கூறிய அவர், நாளை முதல் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளலாம் எனவும், பிற மாவட்டங்களில் சென்னை வருபவருக்கு தனிமைப்படுத்தும் முறை ரத்து என தெரிவித்த அவர், சென்னை கடற்கரைக்கு மக்களை அனுமதிப்பது தொடர்பாக அரசின் உயர்மட்டக்குழு முடிவு செய்யும் என கூறினார்.