“மின்வெட்டு இல்லாமல் இருக்க என்ன நடவடிக்கை”அரசிற்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி…???
மின்வெட்டு ஏற்படாமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எண்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
உயர்நீதிமன்றத்தில் காற்றாலை மின்சாரத்தை மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பயன்படுத்தவில்லை என தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்காக நீதிபதி கிருபாகரன் விசாரித்தார்.
அப்போது, தமிழகத்தில் மின் பற்றாக்குறை உள்ளதா? , அனல் மின்நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை உள்ளதா? அப்படியானால் அதை நிவர்த்தி செய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்று கேள்வி ஏழுப்பினார்.
இதுகுறித்து மின்துறை செயலாளரும் மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் ஆகியோர் வெள்ளிக்கிழமை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
DINASUVADU