சென்னையில் பெரும்பாலான பகுதியில் மழை நீர் தேங்கி இருப்பதால், தேங்கி இருக்கும் மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் இன்று இரவு வரை கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பெரும்பாலான பகுதியில் மழைநீர் சூழ்ந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்த நிலையில், மாநகராட்சி சார்பில் மக்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கி வருகிறோம் – அமைச்சர் நேரு
இந்த நிலையில், பல இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்துள்ள பேட்டியில், சென்னையை சுற்றியுள்ள பகுதிகள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை பகுதிகளுக்கு மின்சாரம் வழங்ககூடிய 400கே.வி லைன் பாதிக்கப்பட்டுள்ளது. இது தற்போது தான் சரிசெய்யப்பட்டுள்ளது.
துணை மின்நிலையங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதால், இதனால் பல இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. மழை நீர் தேங்கியுள்ளதால் தான் தொடர்ந்து பணி செய்ய இயலாத சூழல் நிலவுகிறது. மரங்கள் அங்கங்கே முறிந்து விழுந்துள்ளதால், பணிகள் மேற்கொள்வது சற்று சவாலாக உள்ளது. மழை படிப்படியாக குறைந்த பின் மின் விநியோகம் சீராக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…