இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடுகான ஏ,பி உள்ளிட்ட படிவங்களில் கையெழுத்திட தமிழ் மகன் உசேனுக்கு அதிகாரம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசுவும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில்முருகனும் அறிவிக்கப்பட்டனர்.
இரட்டை இலை சின்னத்தில் யார் போட்டியிடுவது என்ற குழப்பம் தொடர்ந்து நீடித்து வந்த நிலையில், உச்சநீதிமன்றம் நேற்று ஒ.பி.எஸ் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முடிவுகளை எடுக்கலாம். பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவு அவைத்தலைவரால் தேத்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும் என அறிவித்திருந்தது.
அந்த வகையில், இன்று காலை அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், எடப்பாடி பழனிசாமி தரப்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தென்னரசுக்கு ஆதரவாக அனைத்து மாவட்ட செயலலாளர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருந்தார்.
சென்னை ராயப்பேட்டையில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடுகான ஏ,பி உள்ளிட்ட படிவங்களில் கையெழுத்திட தமிழ் மகன் உசேனுக்கு அதிகாரம் அளிக்கப்படுவதாகவும், அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தேர்தல் ஆணையத்திற்கு முறைப்படி தகவல் தெரிவிக்கவும் பொதுக்குழு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது .
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…