புதுச்சேரியில் மின் விநியோகம் தனியாரிடம் ஒப்படைக்கப்படாது.! முதல்வர் அறிவிப்பு.!
புதுச்சேரி மாநிலத்தில் மின் விநியோக உரிமையை தனியாரிடம் ஒப்படைக்க மாட்டோம் -புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
நிதி நெருக்கடியை சமாளிக்க சில பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதில் மின்சாரத்துறையும் தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுச்சேரியில் தற்போது ஜூன் 1 முதல் புதிய மின்கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் மின் விநியோகம் தனியாரிடம் கொடுக்கப்படுமா என கேள்வி எழுந்தது.
இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் மின் விநியோக உரிமையை தனியாரிடம் ஒப்படைக்க மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம் எனவும், தற்போதைய இக்கட்டான சூழலில் மத்திய அரசு இது போன்ற விஷயங்களில் அரசியல் செய்யாமல் மாநிலங்களுக்கு தேவையான நிதி ஆதாரத்தை தர வேண்டும் என புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.