பவர் கட்.. வாட்டர் கட்.. ஆனால் Money கட் மட்டும் இல்லை – சீமான் விமர்சனம்

Default Image

உண்மையைச் சொன்னால் கோவித்துக் கொள்ளாமல் அதற்கான பதிலை அமைச்சர் வழங்க வேண்டும் என சீமான் பேட்டி.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் எனக்கும் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. அன்பும் பாசமும் அதே அளவு இருந்தாலும் 10 மணி நேரம் கரண்ட் இல்லை. தமிழகத்தில் கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் திமுக, அதிமுகத்தான் ஆண்டுள்ளது. தமிழக்தில் உற்பத்தியில் முதலீடு செய்யவில்லை, வாங்குவதில் தான் முதலீடு செய்யப்படுகிறது.

பாதுகாப்பான சூழல் என்பது காற்றாலை சூரிய ஒளி, இதனை நோக்கி நகராமல் இன்னும் அணு, அனல் போன்றவற்றை மட்டுமே செய்துகொண்டியிருக்கிறார்கள். கோடை காலத்தில் மின்தடை நிலவி வருகிறது என கூறி, கோடையில் பவர் கட், வாட்டர் கட் என எல்லாமே உள்ளது. ஆனால் Money கட் இல்லை என்றும் Money கட் மட்டும் தான் தடையில்லாமல் சென்று கொண்டியிருக்கிறது எனவும் விமர்சித்தார்.

மற்ற மாநிலங்களைவிட அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்குவதாகவும், உண்மையைச் சொன்னால் கோவித்துக் கொள்ளாமல் அதற்கான பதிலை அமைச்சர் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதை விட, முதலில் மின்சாரத்தை தடையில்லாமல் கொடுங்கள். இதன்பின் இலவசம் மின்சாரம் தருவதா இல்லையா என்று யோசிக்கலாம் என கூறினார். வெற்று அறிவிப்பை மட்டுமே திமுக கூறி கொண்டு வருகிறது என குற்றசாட்டினார். இதனால் திமுக அரசு என்பது சேவை அரசியல் கிடையாது வெறும் செய்தி அரசியல் தான் என்றும் குறிப்பிட்டார்.

இதன்பின் பேசிய அவர், ஆதீனத்தை பல்லக்கில் தூக்கி செல்லும் பண்பாடு, கோட்பாட்டை நான் வெறுக்கிறேன். பட்டணப் பிரவேசத்தை அரசே அனுமதித்தாலும் நான் அதை எதிர்க்கிறேன். அறிவியல் வளர்ச்சி வந்த பிறகு பல்லக்கு தூக்குவதற்கு ஆதினம் அவர்களே வேண்டாம் என்று சொல்லியிருக்க வேண்டும் என்றும் பல்லக்கில் பயணம் செய்பவர் ஆதிக்கவாதி, அவரை தூக்கி சுமப்பவர் ஏமாளி எனவும் கூறினார். மேலும் , இந்தி பேசுகிறர்வர்கள் நல்லவர்கள் எனில் இந்தி பேச தெரியாதோர் கெட்டவர்களா என நடிகை சுஹாசினிக்கு கேள்வி எழுப்பினர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்