Sadayandi Moopanar – தமிழ்நாட்டில் நெல்லை, திருச்சி, சென்னை என பல்வேறு நகரங்களில் ஜவுளி துறையில் முன்னணியில் இருக்கும் போத்தீஸ் நிறுவனத்தின் நிறுவனர் சடையாண்டி மூப்பனார் (வயது 84) நேற்று முன்தினம் இரவு சென்னையில் தனது மகன் வீட்டில் உயிரிழந்தார்.
சடையாண்டி மூப்பனார் நெசவாளியான தனது தந்தை போத்தி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஜவுளி விற்பனை செய்து வந்ததை கவனித்து வந்து பின்னர் தனது தனது தந்தை சிறியதாக ஆரம்பித்த போத்தி அண்ட் சன்ஸ் ஜவுளி கடையை சடையாண்டி மூப்பனார் பின்னர் திருநெல்வேலியில் போத்தீஸ் என்று ஜவுளி கடையை தொடங்கினார் . அதன் பிறகு 2000 காலகட்டத்தில் சென்னையில் போத்தீஸ் ஜவுளி கடையை தொடங்கும் அளவுக்கு முன்னேறினார்.
தற்போது வரை நான்கு தலைமுறைகளாக போத்தீஸ் ஜவுளி நிறுவனம் வருகிறது. மிகப்பெரிய ஜவுளி சாம்ராஜ்யத்தை கட்டமைத்த சடையாண்டி மூப்பனார் மறைவு காரணமாக நேற்று இந்தியா முழுக்க உள்ள போத்தீஸ் ஜவுளி கடைகள் மூடப்பட்டன.
மறைந்த போத்தீஸ் நிறுவனர் சடையாண்டியின் சொந்த மாவட்டமான விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள பூர்வீக கிராமத்தில் நேற்று மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…