நுழைவுத் தேர்வை ஒத்தி வைப்பதே சரியான முடிவு என்று கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
மருத்துவ படிப்பிற்கான இந்தாண்டு நீட் தேர்வு செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெறும் என்றும், ஜே.இ.இ எனப்படும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத்தேர்வானது செப்டம்பர் 1 முதல் 6-ஆம் தேதிக்குள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், மாணவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்ந்து தேர்வுகளை தள்ளி வைக்க கோரி வைத்தனர். இந்த சுழலில் தேசிய தேர்வு முகமை ஜே.இ.இ மற்றும் நீட் ஆகிய தேர்வுகள் திட்டமிட்டபடி செப்டம்பர் மாதம் நடைபெறும் என அறிவித்தது.மேலும் நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,தன் முடிவுகளால் அரசு இன்றைய தலைமுறையை அலட்சியப் படுத்துவது என்பதே கடும் விமர்சனத்துக்குரிய தவறு. நாளையை ஆளப்போகும் மாணவர்களின் மனநிலை புரியாமல், முடிவுகள் எடுப்பது மன்னிக்க முடியாத குற்றம். நுழைவுத் தேர்வை ஒத்தி வைப்பதே சரியான முடிவு என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை : தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து கடும் வெப்பம் கொளுத்தி வருகிறது. இந்த வேளையில், சில இடங்களில்…
திருவனந்தபுரம் : கேரள மாநில முதல்வர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து வளாகங்களிலும் சோதனை நடத்த…
புதுச்சேரி : காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம் நாடுமுழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர், பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
சென்னை : இன்று அரசு ஊழியர்கள் மற்றும் காவலத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது.…
டெல்லி : இணையத்தில் அவ்வப்போது போலி செய்திகள் அந்தந்த சூழலுக்கு ஏற்ப பலரை நம்ப வைக்கும்படி போலி செய்திகள் உலா…