கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணையை செப்டம்பர் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.
கொடநாடு பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கை போலீசார் மீண்டும் விசாரிப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சயான், நிபந்தனை ஜாமீனில் ஊட்டியில் இருந்த நிலையில், மறுவிசாரணைக்காக ஆஜராகுமாறு போலீசார் சாயனுக்கு சம்மன் அனுப்பினர்.
இதையடுத்து, சயான் கடந்த 17-ந் தேதி ஊட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், குன்னூர் டி.எஸ்.பி. சுரேஷ் ஆகியோரிடம் 3 மணி நேரம் வாக்குமூலம் அளித்தார். இந்த வாக்குமூலத்தில் கொடநாடு வழக்கில் அதிமுக முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக சயான் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று சயான் உதகை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்.
பின்னர், அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் உதகை மாவட்ட நீதிமன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம். கொடநாடு வழக்கின் விசாரணையை செப்டம்பர் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்ததாக தெரிவித்தார்.
கோடநாடு வழக்கில் மேலும் சிலரிடம் விசாரணை நடத்த வேண்டியது என உச்சநீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் விளக்கம் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…
டெல்லி : உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…