#BREAKING: தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு தள்ளிவைப்பு!
அக்.1-ம் தேதி தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு தஹள்ளிவாய்ப்பு என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.
தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு தள்ளிவைக்கப்படுவதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. வரும் அக்டோபர் 1-ம் தேதி நடைபெறவிருந்த தேர்வு, அக்டோபர் 15-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழ் மொழி திறனறித் தேர்வுக்கு தமிழ் தெரிந்த 11-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம் என்றும் http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 9 வரை விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதில், 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் 12-ம் வகுப்பு முடிக்கும் வரை அதாவது 2 ஆண்டுகளுக்கு பள்ளி கல்வித்துறை மூலம் மாதம் ரூ.1,500 கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்து. தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வில் 50% அரசுப்பள்ளி மாணவர்கள், 50% தனியார் பள்ளி மாணவர்கள் என்று தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த தேர்வில் 10-ம் வகுப்பு தமிழ் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.