தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் ஒத்திவைப்பு – அமைச்சர் காமராஜ்

கொரோனா தடுப்பு நடவடிக்கையால் ஏப்ரல் 1ம் தேதி முதல் தமிழகத்தில் அமல்படுத்தப்படவிருந்த ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதால் தற்போதைக்கு திட்டம் சத்தியமில்லை என திருவாரூரில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்கு பின் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார்.
இதனிடையே ஏற்கனவே ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் முதற்கட்டமாக நெல்லை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த நிலையில், வரும் 1 ம் தேதி தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் காமராஜ் அறிவித்திருந்த நிலையில், தற்போது தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதால் தற்போதைக்கு ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமலுக்கு வருவது சத்தியமில்லை என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025
வக்பு வாரிய சட்டத்திருத்தம் : ” ஒரு இஸ்லாமியர் கூட இல்லையா?” தவெக தலைவர் விஜய் கடும் கண்டனம்!
April 3, 2025