அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை வரும் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் மாவட்டம் நீதிமன்றம். பூத்துறை செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக வழக்கு தொடுக்கப்பட்டது. 2006-11ல் திமுக ஆட்சியில் செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுத்தியாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கடந்த மாதம் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. சென்னை மற்றும் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய 9 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியிருந்தனர். அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினார். இதன்பின் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் சிகாமணியிடம் விசாரணையும் நடத்தியிருந்தனர்.
இதனிடையே, அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக அமைச்சர் பொன்முடி, அவரது கவுதம சிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோருக்கு எதிராக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விழுப்புரத்தில் உள்ள எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த நிலையில், அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை வரும் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது விழுப்புரம் நீதிமன்றம்.
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.200 அதிகரித்து விற்பனையான நிலையில், பொங்கல் பண்டிகையான…