ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு – உயர்நீதிமன்றம் ஆணை!
சென்னையில் நாளை நடைபெறவிருந்த ஆசிரியர்கள் பணியிட மாறுதல்களுக்கான கலந்தவை ஒத்திவைக்ககோரி உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. கலந்தாய்வு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த புதிய அரசாணையையும் தடை செய்வதாக அறிவித்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் பணி மாறுதல் பெற விரும்பும் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும். அதன்படி இந்த ஆண்டிற்கான கலந்தாய்வு நாளைய தினம் நடக்கும் என்று தமிழக அரசு அறிவித்து கலந்தாய்வு நடத்துவதற்கான தனி அரசாணையையும் வெளியிட்டது.
இந்நிலையில், தற்போது திடீரென கலந்தாய்வு ஒத்திவைக்க படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.