மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு தமிழக சட்டப்பேரவை ஜூலை 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மறைந்த உறுப்பினர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்றைய அலுவல்கள் ஒத்திவைக்கப்படுகிறது என்று சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.சட்டப்பேரவை மீண்டும் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கூடும் என்றும் சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார் .மேலும் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று,மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சூலூர் கனகராஜ், விக்கிரவாண்டி ராதாமணி ஆகியோர் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.முன்னாள் எம்எல்ஏ-க்கள் சுந்தரதாஸ், பஞ்சவர்ணம், சுப்பிரமணியம், செல்வராஜ், எ.கே.சி.சுந்தரவேல், ராமநாதன், முனுசாமி, சிவசுப்பிரமணியன் ஆயோரின் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.
ஜூலை 1ம் தேதி பேரவையில் வனம் மற்றும் சுற்றுச்சூழல் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. ஜூலை 30 வரை நடக்கும் கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள் மீதும் விவாதம் நடக்கிறது.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
டெல்லி : ஆண்டுதோறும் எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2025)…
சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம்…
ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…
ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும்…
கோவை : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.…