2 எம்எல்ஏக்களின் பதவியேற்பு நிகழ்ச்சி தள்ளிவைப்பு
2 எம்எல்ஏக்களின் பதவியேற்பு நிகழ்ச்சி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 21-ஆம் தேதி தமிழகத்தில் காலியாக இருந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது .இதற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.இதில் விக்கிரவாண்டியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் மற்றும் நாங்குநேரியில் மற்றொரு அதிமுக வேட்பாளரான ரெட்டியார்பட்டி நாராயணனும் வெற்றி பெற்றனர்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக உறுப்பினர்கள் வரும் 29-ஆம் தேதி பதவியேற்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டது.இந்த நிலையில் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற முத்தமிழ்ச்செல்வன், நாராயணன் ஆகிய 2 அதிமுக எம்எல்ஏக்களும் இன்று பதவியேற்க இருந்த நிலையில் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.