பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு டிசம்பர் 9ம் தேதி அன்று நடைபெறும் என அறிவிப்பு.
வரும் 28 அன்று நடைபெறவுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு (BT Deployment Counselling) மட்டும் நிருவாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வி ஆணையர் அறிவித்துள்ளார். இக்கலந்தாய்வு டிசம்பர் 9ம் தேதி அன்று நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், 2022-23 கல்வியாண்டிற்கான 01.08.2022 நிலவரப்படி முதுகலை / பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (BT & IPG Staff Fixation) நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டு, அதனடிப்படையில் ஆசிரியருடன் உபரி எனக் கண்டறியப்பட்ட (Surplus Post With Person) முதுகலை / பட்டதாரி ஆசிரியர்களை பணிநிரவல் மூலம் வருகின்ற 28.11.2022 பட்டதாரி ஆசிரியர்களுக்கும், 29.11.2022 முதுகலை ஆசிரியர்களுக்கும், EMIS இணையதள வாயிலாக (Online Deployment Counselling) நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 28 அன்று நடைபெறவுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் (BT Deployment Counselling) கலந்தாய்வு மட்டும் நிருவாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுகிறது. இக்கலந்தாய்வு டிசம்பர் 9ம் தேதி அன்று நடைபெறும். மேலும் முதுகலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு (PG Deployment Counselling) திட்டமிட்டபடி 29.11.2022 அன்று நடைபெறும் என்பதையும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் 29 வருட 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக நவம்பர்…
மும்பை : அதானி குழுமம் மீது முன்னர் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றசாட்டை முன்வைத்தது அப்போது அந்த அறிக்கை…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும் மனைவி சாய்ரா பானுவும் திருமணமாகி 29 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும், இருவரும்…
டெல்லி : அதானி குழுமத் தலைவர் கெளதம் அதானி மீது அமெரிக்க வழக்கறிஞர்கள் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில்,…