தபால் வாக்கு வழக்கு ஒத்திவைப்பு – சென்னை உயர்நீதிமன்றம்

Default Image

80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் முறையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு.

தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் 80 வயதிற்கு மேலான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு தபால் வாக்களிக்கும் வசதியை வழங்குவதென தேர்தல் ஆணையம் அறிவித்தது. விருப்பப்படுவர்கள் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இந்த வசதியை பயன்படுத்தலாம் என்றும் கூறப்பட்டது.

இதையடுத்து, 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் முறையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தது. இந்த மனுவில், புதிய விதியால் தேர்தலில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறி, இந்த திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய உத்தரவிடவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டோர் தபாலில் வாக்களிக்கும் முறைக்கு எதிராக தி.மு.க. மனு மற்றும் டிசம்பர் 3-ஆம் தேதி இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரித்த நீதிமன்றம், ஜனவரி 7ம் தேதி விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்து, வழக்கை ஒத்திவைத்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்