சென்னை : மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு நரேந்திர மோடி முதல் முறையாக ஜூன் 20 ஆம் தேதி தமிழகம் வரவுள்ளதாக ஒரு தகவல் வெளியானது. தற்பொழுது, பிரதமர் 20-ம் தேதி தமிழ்நாடு வருகை தர இருந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆம், 20-ம் தேதி தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியின் வருகை தொடர்பான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் அறிவித்துள்ளார்.
அதாவது, சென்னை – நாகர்கோவில் மற்றும் மதுரை – பெங்களூரு ஆகிய இரண்டு வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 20 ஆம் தேதி சென்னை வருகிறார் என தகவல் வெளியானது. எம்ஜி ராமச்சந்திரன் சென்னை சென்ட்ரலில் நடைபெறும் இந்த விழாவில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுடன் கலந்து கொள்வதாகவும் சொல்லப்பட்டது.
மேலும், பேசின் பாலத்தில் விபி பராமரிப்பு கிடங்குக்கு அடிக்கல் நாட்டும் மோடி, சென்னையில் உள்ள நெய்வேலி லிக்னைட்டில் ஒரு சில நெடுஞ்சாலைத் திட்டங்களையும் அவர் தொடங்கி வைப்பார் என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…
சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…
சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது தந்தை…
சென்னை: கம்பீர ஹீரோவாக இருந்த நடிகர் விஷாலின் சமீபத்திய தோற்றம், கை நடுக்கம் ஆகியவற்றை பார்த்த பலரும் “அச்சச்சோ என்னாச்சு…
சென்னை: அயலகத் தமிழர் தினத்தை முன்னிட்டு சென்னை சென்னை நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் ‘அயலகத் தமிழர் தினம்’…
சென்னை: 12 வருடங்களுக்கு பிறகு வெளியான சுந்தர்.சி - விஷாலின் 'மதகஜராஜா' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.…