தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு – தமிழக அரசு
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பதாக தமிழக அரசு அறிவிப்பு.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலால், கடந்த 8 மாத காலமாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கல்வி நிறுவனங்களை திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக நவ.16-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்க்கு அரசியல் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நவ.16 பள்ளிகள் திறக்கப்படாது என்றும், இதுகுறித்து நவ.9ம் தேதி கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், 50%-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பிள்ளைகளை திறக்க வேண்டாம் என தெரிவித்தனர். இதனையடுத்து, தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்படுவதாகவும், பள்ளிகள் திறப்பு தேதி குறித்து, சூழ்நிலைக்கு ஏற்ப பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.